தமிழகம் நழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளுக்கு பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு (TRB) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காலியாகவுள்ள 2,207 பணியிடங்களுக்கு தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு முன்னதாக வெளியானது. இதனையடுத்து ஆசிரியர் பணி மீது ஆர்வமுள்ள தகுதி படைத்தவர்கள் பலரும் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் வேளாண் அறிவியல் பட்டதாரி பணியிடங்களுக்கும் விரைவில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி தொழிற்கல்வி பிரிவு இணை இயக்குநர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக வேளாண் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். எனவே காலியிடங்களின் விவரங்களை உடனடியாக இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.