தமிழகத்தில் அண்மையில் வெளியிட்ட 2022 -23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் கூறியுள்ளதாவது, புதிய திட்டம் மூலம் அரசு பள்ளிகளில் 18,000 வகுப்பறைகள் கட்டப்படும்.மேலும் பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் வகுப்புகள், கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
அதன்படி பேராசிரியர் அன்பழகனார் மேம்பாட்டு திட்டத்தில் இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 18,000 வகுப்பறைகள் கட்டப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்காக 5 ஆண்டுகளுக்கு ₹ 7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாகவும்,அதன் முதற்கட்டமாக ₹ 1,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புகள் நன்றாக இருந்தாலும் நடைமுறைக்கு ஒத்து வருமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.