கொரோனாவால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நிதிச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. குறிப்பாக அரசின் தேவையற்ற செலவுகளை குறைக்கும் வகையில் பல்வேறு முடிவுகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றது.
தமிழக அரசு கூட நிதி சிக்கலை குறைக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் தற்போது சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகள் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட மதிப்பூதியம் வழங்கப்பபடாது என தமிழக அரசு குறிப்பிட்டிருக்கிறது.