தமிழகத்தில் கொரோனா அச்சறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒருசில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு மத்தியில் மாணவர்களுக்கு எப்போது நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி குழந்தைகள் அனைவருக்கும் பால் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். இதனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து பாலையும் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்ய இயலும் என்றும், ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை நிர்ணயிக்க தனிக்குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.