தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.அது மட்டுமல்லாமல் அவ்வப்போது புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இது தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்பட பகுதிகளை கண்டறிந்து உரிய பேருந்துகளை இயக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் நேரங்களில் அனைத்து நகர பேருந்துகள் இயக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் அனைத்து பேருந்துகளிலும் அவசர அழைப்பு பொத்தான்களை பொருத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மகளிருக்கான கட்டணமில்லா அனைத்து பேருந்துகளையும் ஒரே வண்ணத்தில் கீழ் கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.