அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்க ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் “அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறனை வளர்க்க 4 முதல் 9ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வரும் ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை விரைவாக முடிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories