தமிழகத்தில் வருவாயை அதிகரித்த நிதி சுமையை குறைக்க போக்குவரத்து ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்து போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு இலக்கு நிர்ணயித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.14வது ஊதிய பேச்சுவார்த்தையின் படியும் அகலவிலைப்படி உயர்வு காரணமாகவும் மாதத்திற்கு 10 கோடி ரூபாய் தேவை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
மாதத்திற்கு 3. 40 கோடி ரூபாய் பேருந்துகளில் விளம்பரங்கள் மூலமாக வருகிறது .மீதமுள்ள 6.60 கோடி ரூபாய் பயணிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட் மூலமாக வசூலிக்க வேண்டும்.பேருந்துகளில் முழுமையான அளவு பயணிகளை ஏற்றி சென்று கட்டணங்களை வசூல் செய்து வருவாயை அதிகரிக்க வேண்டும். இதனால் போக்குவரத்து ஊழியர்களுக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே போக்குவரத்து கழகத்தில் பணியாற்றக் கூடிய பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு டீசல் சிக்கனத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.