தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தலை பெரியதா அல்லது சிறியதா என்பது உட்பட36 வகையான தகவல்களை சேகரிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளி மாணவிகளிடம் மாதவிடாய் குறித்த தகவல்களை பெற்று அதனை செயலியில் பதிவிட அரசு உத்தரவிட்டது. தற்போது மருத்துவ ஆராய்ச்சி மற்றும் தகவல் பதிவு பணி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் 36 வகையான நோய்கள் குறித்து ஆய்வு செய்து அதன் விபரத்தை எமிஸ் செயலியில் பதிவிட தமிழக முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு ரத்த சோகை, தைராய்டு மற்றும் கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட பல நோய்கள் சம்பந்தமான ஆய்வு பட்டிகளை தயார் செய்ய வேண்டும்.ஒவ்வொரு மாணவரையும் தனியாக அழைத்து அவரது உடலை சோதனை செய்து இந்த நோய்கள் குறித்த மாணவர்களின் தகவலை பதிவு செய்ய வேண்டும்.நடைபாண்டி பள்ளிகள் திறந்தது முதல் பாடம் நடத்த விடாமல் பல்வேறு திட்ட பணிகளில் புள்ளி விவர சேகரிப்பு மற்றும் செயலாக்கும் தொடர்பாக கூடுதல் பணி வழங்குவதாக ஆசிரியர்கள் கவலை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.