தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்தவும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலும் அரசு முயற்சி செய்து வருகிறது. அதேசமயம் விரைவில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் தரத்திலான கல்வி அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அரசு உறுதி அளித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு பள்ளிகளில் படித்துள்ள முன்னாள் மாணவர்கள் தங்கள் பள்ளியின் முன்னேற்றத்திற்காக உதவி செய்ய முன்வர வேண்டும் எனவும் இது போன்ற செயல்பாடுகளை ஒருங்கிணைப்பதற்காக புதிய அமைப்பு ஒன்றை இன்று முதல் தொடங்க இருப்பதாகவும் அதன் மூலம் அரசு பள்ளிகளின் தேவைகள் நிவர்த்தி செய்யப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் உதவி செய்வதற்கான புதிய அமைப்பை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.