Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்குவதற்கான பட்டியலை விரைந்து அனுப்புமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மொத்தமுள்ள வருடங்களை கணக்கீட்டு பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வருகின்ற அனைத்து வகை ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் விபரங்களை பள்ளிக் கல்வித்துறை கேட்டுள்ளது. அதாவது பதவி உயர்வு பெறுவதற்கு தகுதியான ஆசிரியர்களின் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. இந்தப் பதவி வாரியான தேர்ந்தோர் பட்டியல் ஜனவரி 1, 2021 ஆம் ஆண்டு தேதிப்படி தயார் செய்திட ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை வருகின்ற நவம்பர் 20-ஆம் தேதிக்குள்முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Categories

Tech |