Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அழகு நிலையங்கள் இயங்க தடை….. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் பரிசோதனை எண்ணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 21 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 6 ஆம் தேதி முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் இழப்பு சார்ந்த நிகழ்வுகளில் 25 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இறுதி ஊர்வலங்கள் மற்றும் அது சார்ந்த சடங்குகள் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி,ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் அழகு நிலையங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |