Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்… ஆகஸ்ட் 16 வரை நீட்டிப்பு…. மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு ஜூன் 22ஆம் தேதி தொடங்கியது.விண்ணப்ப பதிவு செய்ய கடந்த 27ஆம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில் தற்போது அதனை ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுவரை 4 லட்சத்தி 7 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில்‌ உள்ள 163 அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர்‌ சேர்க்கைக்கான (2022-2023) விண்ணப்பங்களை https://tngasa.org/, https://tngasa.in/என்ற இணையதள முகவரிகளில்‌ பதிவு செய்யலாம்‌.இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள்‌ கல்லூரி உதவி மையங்கள் மூலம்‌ விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின்‌ பட்டியல்‌ மேற்குறித்த இணையதள முகவரியில்‌ வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |