கொரோனா பொதுமுடக்கத்தால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றன. அதே நேரத்தில் கல்வி நிலையங்கள் எப்போது திறக்கும் நாம் எப்போது கல்வி பயிலலாம் நம்முடைய உயர்கல்வி நோக்கி நாம் எப்போது செல்வது என்ற எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் கல்வி சார்ந்த பல அறிவிப்புகளை தமிழக அரசாங்கம் வெளியிட்டு வருகிறது
தொழிலாளர்கள் கல்வி நிலையத்தில் பட்டப் படிப்பில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 200 ( எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூபாய் 100 ) செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 – 28 440102, 28 44 57 78 ஆகிய எண்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.