தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா தொற்று சென்னையை மையம் கொண்டிருந்தது. தமிழக அரசின் சிறப்பான சுகாதார நடவடிக்கையால் பரவல் தடுக்கப்பட்டு, சென்னை அதிலிருந்து மீண்டு வருகிறது. மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் இருந்த தமிழக அரசின் சுகாதார நடவடிக்கை மற்ற மாவட்டங்களுக்கும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் பேசி வருகின்றனர். ஏனென்று சொன்னால் சில வாரங்களாக சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து வேகம் எடுத்து வருவது அரசுக்கு ஒரு சவாலாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் வருகின்ற 31ம் தேதி முதல் முழு ஊரடங்கு முடிவடைகின்றது. ஆகஸ்ட் 1முதல் தமிழக அரசு எந்த மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளும் என மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப் பட்டாலும் ஆகஸ்ட் 1முதல் பஸ் ரயில் போக்குவரத்து இயங்கு வதற்கு அனுமதி இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலில் உறுதி தன்மை குறித்து நாளை மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனையில் தெரிய வரும்.ஏற்கனவே மருத்துவ நிபுணர்களும் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று தெரிவித்திருந்த நிலையில் போக்குவரத்து துறையில் இப்படியான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. கொரோனவை கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பான நடவடிக்கையை தொடர்ந்து எடுத்து வருவதால்…. இதுகுறித்து விரைவில் தெரியவரும் என்று சொல்லப்படுகின்றது.