Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 31வரை – அரசு அதிரடி உத்தரவு

நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக மகராஷ்டிரா அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருப்பது தமிழகம் தான். இங்கே கொரோனா தொடர்ந்து வேகம் எடுத்து வருவதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசு சில வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி தளர்வுகள் பிறப்பித்தாலும் மக்களின் நலனுக்காக அதில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்து வருகின்றது.

அந்த வகையில் பின்பற்றப்படும் நடைமுறைதான் இ-பாஸ். நாடு முழுவதும் தற்போது ஏழாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. மற்ற மாநிலங்கள் அனைத்திலும் இ-பாஸ் முறையை ரத்து செய்தாலும், தமிழகம் இன்னும் இ-பாஸ் முறையை ரத்து செய்யாமல் உள்ளது. இந்நிலையில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை இ-பாஸ் பெறுவது கட்டாயம் நடைபெறும்,  அதில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |