Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்புகளை அகற்ற…. உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…!!!

சென்னை எழும்பூரில் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள தனியார் கட்டடம் திட்ட அனுமதியை மீறி கட்டப்பட்டதாக கூறி அதை சீல் வைக்க மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. மேலும் அனுமதி இன்றி கட்டப்பட்ட பகுதிகளை இடிக்கவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து அந்த கூட்டத்தை வாடகைக்கு எடுத்த எஸ் பிளஸ் மீடியா என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இவ்வழக்கை நீதிபதிகள் ஆர்.வைத்தியநாதன், நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் போன்றோர் விசாரித்தனர்.

அப்போது மாநகராட்சியின் நோட்டீஸை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்ததாகவும், அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதன்பின் நீதிபதிகள் மாநகராட்சி முடிவை எதிர்த்து மனுதாரர் செய்த மேல் முறையீட்டு மனுவை அரசு பரிசீலிக்க வேண்டும். மனுதாரர் தரப்பு விளக்கம் அளிக்க அவகாசம் கொடுக்க வேண்டும். மேலும் 3 மாதங்களில் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.

அரசு நிலங்களை ஆய்வு மேற்கொண்டு எல்லைகளை வரையறுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் அதிரடிப்படை அமைக்கும்படி, கடந்து 2019-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி அரசு அதிரடிபடை அமைத்ததா என தெரியவில்லை. அந்த உத்தரவை வேண்டுமென்றே அமல்படுத்தாமல் இருந்தது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Categories

Tech |