தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் விருப்ப பணியிட மாறுதல் மற்றும் பொது மாறுதல் வழங்கப்படும். ஆனால் கடந்த ஆண்டிற்கான விருப்ப பணியிட மாறுதல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு காரணமாக நடத்தப்படவில்லை. இந்நிலையில் பொது மாறுதல் கலந்தாய்வு ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது.
அதனைத் தொடர்ந்து தமிழக அரசு நகராட்சி தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, பணியிட மாறுதல் மற்றும் பணி நிரப்புவதற்கான கவுன்சிலிங் ஜனவரி 24ஆம் தேதி முதல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு மட்டுமே அனுமதி எனவும் மற்ற ஆசிரியர்களுக்கும் அனுமதி இல்லை எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.