Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர் தேர்வு தேதியில் மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள் 137 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு பிப்ரவரி 4 (இன்று) வரை தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் முதுகலை பட்டதாரி, உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கான தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம்(TRB) அறிவித்துள்ளது. ஆங்கிலம், கணிதம், கணினி அறிவியல் பாடங்களுக்கான தேர்வு வரும் 16ஆம் தேதி முதல் (தேர்தல் காரணமாக 19ம் தேதி மட்டும் தேர்வு கிடையாது) 20ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |