தமிழகத்தில் பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் மாறுதல் வழங்கப்பட்ட பள்ளியில் உடனே சேர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பணி நிரவல் பெற்ற ஆசிரியர்கள் தற்போது பணியாற்றும் பள்ளியில் இருந்து உடனே விலகி அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பள்ளியில் சேர வேண்டும். பணியாணை கிடைக்கப் பெற்றும் அதே பள்ளியில் ஆசிரியர்கள் தொடர்ந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Categories