Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு… ஜூன் 23ஆம் தேதி கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

மாணவர்கள் கல்வி நிலையத்தை விட்டு வெளியேறும் போதே வேலை கிடைக்கவும், இடைநின்ற மாணவர்களின் திறனை வளர்த்து, வாழ்வாதாரம் சிறந்து விளங்கவும், மாணவர்களை தொழில் முனைவோராக்கவும் என எல்லாவற்றையும் ஒருங்கிணைந்த திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்.  தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருகின்ற ஜூன் 23ஆம் தேதி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதில் மாணவர்களுக்கு எவ்வாறு வழிகாட்டுதல்கள் வழங்கலாம்? போட்டி தேர்வுக்கு தயாராவது எப்படி? என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.எனவே முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் இந்த பயிற்சி வகுப்பில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |