தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா காரணமாக ஆசிரியர் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கொரோன பாதிப்பு குறைந்து வந்த நிலையில் ஆசிரியர் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் வரும் 12ஆம் தேதி வரை நடைபெற இருந்த ஆதி திராவிட நலத்துறை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்/ காப்பாளர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு மீண்டும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக ஆதி திராவிட நலத்துறை அறிவித்துள்ளது. கொரோனா எதிரொலியாக ஜனவரி 10, 11, 12 போன்ற தேதிகளில் நடைபெற இருந்த ஆசிரியர் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும் என அறிவித்துள்ளது.
Categories