Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஆட்டோ, டாக்சிகளில் இனி…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கின் போது ஆட்டோ, டாக்சிகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. அதனை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், முழு ஊரடங்கு சமயத்தில் வெளியூர்களுக்குச் சென்று திரும்பும் பயணிகள் ரயில் நிலையங்கள்,பேருந்து நிலையங்களில் இருந்து வீடுகளுக்குச் செல்ல ஆட்டோ மற்றும் டாக்சிகள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். அப்போது கிடைக்கும் ஒரு சில ஆட்டோ மற்றும் டாக்சிகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. அதனால் இனிவரும் ஊரடங்கு நாட்களில் இது போன்றவை நடப்பதை தவிர்க்க வேண்டும். அரசு அனுமதிக்கப்பட்ட கட்டணத்தில் மக்கள் பயணிப்பதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஊரடங்கு நாட்களில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் அனைவருக்கும் பாராட்டுகள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |