இணைய வழி வகுப்புகளில் பங்கேற்குமாறு மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் கொரோனா காலமாக பள்ளிகள் மூடப்பட்டதிலிருந்து இணைய வழி வகுப்புகள் என்பது கையில் எடுக்கப் பட்டிருக்கிறது. இதில் இணைய வழி வகுப்புகளுக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட வேண்டும் என்று கோரிக்கை பல நாட்களாக இருந்து வந்த நிலையில் நீதிமன்றத்தில் இந்த வழக்கு சென்ற நிலையில் தற்போது அதற்கான அரசாணை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது. இதில் மிக முக்கியமாக எந்த ஒரு மாணவரும் இணையவழி கலந்து கொள்வதற்கு கட்டாயப்படுத்தக்கூடாது. அதில் என்னென்ன வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்பதையும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
அதாவது கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் இந்த அடிப்படையில் தான் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றெல்லாம் எந்த மாணவரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்பதை குறிப்பிட்டு இருக்கிறார்கள். மேலும் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் ஒரே நேரத்தில் இருவரும் கலந்துகொள்வதற்கான சூழல் ஏற்படாத நிலையில் மூத்த குழந்தைக்கு முன்னுரிமை கொடுத்து முதலில் இணையவழி வகுப்பில் கலந்து கொள்ள திட்டமிடல் இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
எல்கேஜி, யூகேஜி குழந்தைகளுக்கு இணைய வழி வகுப்பு கூடாது. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒரு நாளைக்கு இரண்டு வகுப்புகள், அதிகபட்சமாக ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக ஒரு நாளைக்கு அவர்களுடைய வகுப்புகள் இருக்க கூடாது எனக்கூறி இருக்கிறார்கள். ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு 3 மணி நேரம் தான் வகுப்புகள் இருக்க வேண்டும் எனக் கூறி இருக்கிறார்கள். அதாவது ஒரு வகுப்பு என்பது 30 லிருந்து 45 நிமிடங்கள் இருக்கலாம். ஒவ்வொரு வகுப்பிற்கும் இடையிலும் பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் இடைவேளை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் இணைய வழி வகுப்பில் கலந்து கொள்ளும் போது கூடவே ஒரு பெரியவர் அவர்களுடன் இருக்க வேண்டும் என்றெல்லாம் அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு ஆசிரியர் 6 வகுப்புகளை எடுக்கலாம். ஒரு வாரத்திற்கு 28 ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் வகையில் இருக்க வேண்டும். இந்த நெறிமுறை அனைத்து பள்ளிக்கும் பொருந்தக்கூடியது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழி அல்லாத போது ஆஃப்லைன் மோடு வழிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் முறை இருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.