தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 5 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பல்வேறு மாவட்டங்களில் அரசு தடுப்பூசி செலுத்தி கொள்வோருக்கு பரிசுகளை வழங்கி மக்களை ஊக்குவித்ததால் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
இந்நிலையில் சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் கூறியது, இந்த வாரம் பண்டிகை காலம் வருவதால் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று அவர் அறிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு அறிவித்ததும் தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.