Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இந்த வருடம் தீபாவளிக்கு…. அமைச்சர் சொன்ன இனிப்பான செய்தி….!!!!

திருவாரூர் மாவட்டம் ஆவடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்றார். அதில் ஆவடி பணிமனையில் இருந்து திருப்பதிக்கு பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆவடியில் இருந்து திருப்பதி செல்வதற்கு வசதியாக புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. வருகின்ற நாட்களில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்து சேவை இயக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ஆவின் ஒட்டுமொத்தமாக சுரண்டப்பட்டு உள்ளது.

இதனை பழைய நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆவின் பாலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் உடனே ஆவின் நிறுவனத்தின் தொலைபேசி எண்ணிற்கு மக்கள் புகார் அளிக்கலாம். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இனி ஆவின் இனிப்பு வகைகளை யாரும் அன்பளிப்பாக தரக்கூடாது. அனைவரும் உரிய பணம் கொடுத்துதான் வாங்க வேண்டும். இந்த வருடம் ராஜஸ்தானில் இருந்து பால் இனிப்பு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

அவற்றை விற்பனை செய்ய 25 சங்கங்கள் மூலம் தமிழகம் முழுவதும் தீபாவளி சிறப்பு இனிப்பு விற்பனை ஸ்டால்கள் அமைக்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது. கடந்த வருடம் 18 டன் இனிப்புகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டன. நடப்பாண்டில் 40 முதல் 50 டன் இனிப்பு வகைகளை விற்பனை செய்ய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இனிவரும் காலங்களில் ஆவினில் ஆட்டுப்பால், நாட்டுப் பசு மாட்டு பால் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நாட்டு பசு மாட்டு பால் விலை கூடுதலாக இருக்கும். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |