தமிழகத்தில் மின்னணு முறையில் ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்களை பெறும் வசதியை செயல்படுத்துவதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை டிஜிட்டல் முறைப்படி வழங்கவும், அவற்றை பார்வையிட்டு சரிபார்க்கவும் வகை செய்வதே டிஜிட்டல் லாக்கர் முறை. இதன் மூலம் குடிமக்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் போது அதற்கு தேவையான ஆதார ஆவணங்களை டிஜிட்டல் லாக்கர் வசதியில் இருந்து எடுத்து இணைத்துக் கொள்ளலாம்.
மேலும் வாகன ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை மற்றும் மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகியவற்றின் நகல்களை மக்களுக்கு இந்த டிஜிட்டல் லாக்கர் முறையின் மூலம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது உள்ள அனைத்து மென்பொருள்களையும் டிஜிட்டல் லாக்கர் முறையுடன் இணைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.