தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக பிறப்பு, இறப்பு மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊடகவியலாளர்கள் இ-பதிவு இல்லாமல் தமிழகம் முழுவதும் பயணிக்கலாம் என்று காவல்துறை தலைவர் திரிபாதி அறிவித்துள்ளார். ஊடகத்துறையினர், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் வழக்கறிஞர் உள்ளிட்டோருக்கு இ-பதிவு அவசியம் இல்லை. அடையாள அட்டை காண்பித்தால் போதும் என்று தெரிவித்துள்ளார்.