Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. இனி பள்ளி விடுதிகளில்….. குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் பள்ளி விடுதிகளில் ஆய்வு செய்யப்படும் என்று குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.

குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மாநிலம் முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல் மற்றும் பாலியல் துன்புறுத்தல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. அண்மையில் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாகவும் இந்த ஆணையும் விசாரணை செய்தது. இந்நிலையில் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி மற்றும் ஆணைய உறுப்பினர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் இன்று ஆய்வு செய்தனர்.

பள்ளியில் உள்ள விடுதிக்குச் சென்று விடுதி சரியாக பராமரிக்கப்பட்டு வருகின்றதா? உணவு போன்றவற்றை ஆய்வு செய்தனர். அப்போது மாணவர் தங்கும் விடுதி சரியாக பராமரிக்கப்படவில்லை என்று கண்டறிந்தனர். இதை தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கு படித்து வரும் 50 மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். சென்னையில் விடுதிகளுடன் இயங்கும் 13 பள்ளிகளை ஆய்வு செய்த அவர் தமிழகம் முழுவதும் விடுதிகளுடன் இயங்கும் பள்ளிகளை தொடர்ச்சியாக ஆய்வு செய்து தவறு செய்யும் வழி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |