மாநகர போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் பேருந்துகளை உரிய பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சாலையின் நடுவிலோ அல்லது பேருந்து நிறுத்தத்தை விட்டு சிறிது தூரம் தள்ளி பேருந்துகளை நிறுத்துவதால் பயணிகள் சிரமத்துடன் ஓடிச் சென்று ஏரும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. இதனால் பயணிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலையும் சில நேரங்களில் மரண விபத்தும் ஏற்பட ஏதுவாகும் சூழ்நிலையும் ஏற்படுவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இதனால் அனைத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் களும் உரிய பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி இறக்கி விட விடப்பட்டுள்ளது. மேலும் பேருந்தை சாலையின் நடுவில் இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்தக் கூடாது என்றும் அரசு பேருந்துகளை உரிய பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி இறக்கி விட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலைகளின் நடுவிலோ அல்லது பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளை நிறுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.