தமிழகத்தில் பொது இடங்களில் இனி தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும் பிறருக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் பொது சுகாதாரத்துறை சட்டத்தில் தமிழக அரசு சட்டத்திருத்தம் செய்துள்ளது. அதில், பொது இடங்கள் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
மார்க்கெட், தியேட்டர்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரிகளில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் . இது குறித்து பள்ளி, கல்லூரி, தியேட்டர்கள், மார்க்கெட், விளையாட்டு கூடங்கள், இதர பொழுதுபோக்கு இடங்கள் உள்ளிட்டவற்றின் உரிமையாளர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களுக்கு வருபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.