Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி – போடு ரகிட ரகிட…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக மக்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல நலத்திட்ட உதவிகளையும், பேரிடர் காலங்களில் அதை கட்டுப்படுத்த்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில், வடகிழக்கு தென்மேற்கு பருவமழை தொடங்கயிருக்கும் நிலையில் அதை எதிர்கொள்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி பருவமழைக்கு முன்னதாக சிறிய பாசன குளங்கள், வாய்க்கால்கள், நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் கிணறுகள் அமைக்க வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் உள்ளிட்டவற்றை உடனே செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

 

Categories

Tech |