Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி… முதல்வர் அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 2 ஆயிரம் மினி கிளினிக் செயல்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் ஒரு மருத்துவர், நர்ஸ், உதவியாளர் கொண்ட 2 1000 மினி கிளினிக் செயல்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்தப் புதிய கிளினிக்குகள் டிசம்பர் 15ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும். மேலும் கொரோனா கட்டுப்பாடு சிகிச்சை, கபசுர குடிநீர் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |