தமிழக முழுவதும் உள்ள ரவுடிகள்,குற்றப் பின்னணி கொண்டோரை கண்காணிக்க பருந்து என்ற செயலியை தமிழக காவல்துறை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. ரவுடிகளின் தற்போதைய நிலை, இருப்பிடம், குற்ற வழக்குகள், அவர்களின் கூட்டாளிகள்,குடும்ப பின்னணி மற்றும் அவரது குடும்பத்தில் வேறு யாரேனும் ரவுடிகள் உள்ளார்களா? உள்ளிட்ட விவரங்களை கண்காணித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க இந்த செயலி உதவும் என தமிழக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி 16,502 ரவுடிகள் இருந்ததாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதனால் ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்க பல்வேறு பிரிவுகளாக பிரித்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.