Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி 4 மணி நேரம் மட்டுமே….. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 26 ஆம் தேதி  முதல் பல கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து தபால் நிலையங்களிலும் உள்ள வாடிக்கையாளர்கள் சேவை கவுண்டர்கள் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவு தபால்கள், பதிவு தபால்கள் மற்றும் பார்சல் சேவைகள் எவ்வித கால தாமதமும் இல்லாமல் குறித்த நேரத்தில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பான தகவலை அறிவிப்பு பலகையில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே வாடிக்கையாளர் சேவை போன்றவர்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |