தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பல்வேறு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதன்படி, கிண்டி வளாகத்தில் பயின்று வரும் மாணவர்களை தொழில்முனைவோா்களாக உருவாக்குவதற்கு ஒரு புதிய ஒப்பந்தமானது போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தமானது அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோா் ஒருங்கிணைப்பு மையம் மற்றும் ஆமதாபாதில் உள்ள தொழில்முனைவோா் மையத்துக்கு இடையே துணைவேந்தர் வேல்ராஜ் முன்னிலையில் நேற்று கையொப்பமானது. இதன் மூலமாக அதிக மாணவர்கள் தொழில் முனைவோர்களாக உருவாக்கப்படுவா். அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆராய்ச்சிகளை சமுதாயத்திற்கு தேவையான முறையில் பயன்படுத்தலாம்.
இதன் காரணமாக நம் சமுதாயம் அதிக பொருளாதார வளர்ச்சி பெற முடியும். இந்த ஒப்பந்தத்தின் முக்கியமான பயனாக ஆமதாபாத்திலுள்ள தொழில்முனைவோர் நடத்தி வரும் சான்றிதழ் படிப்புகளை மாணவர்கள் படிக்கும் போதே கூடுதலாக படிக்கலாம். தற்போதைய காலகட்டத்தில் பொறியியல் முதுநிலை பாடப்பிரிவினைப் படிக்க வரும் மாணவா்களின் எண்ணிக்கை சற்று குறைந்து இருக்கிறது. இதனால் கடந்த 5 வருடங்களில் மாணவர்கள் எண்ணிக்கை 5க்கு குறைவாக இருந்தது. இதன் காரணமாக அந்த பாடப்பிரிவுகள் மூடப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்திலும் பாடப்பிரிவுகளை மூடிவிட்டு, மாணவர்களுக்கு வேலை வாய்ப்புள்ள புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட இருக்கிறது. இதன் மூலமாக மாணவர்கள் அதிக பயனடைவார்கள்.
இதில் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு தற்போது கொரோனா தொற்று மற்றும் பொங்கல் பண்டிகைக்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் ஜனவரி 21ஆம் தேதிக்குப் பின் மாணவா்களுக்கு நேரடியாக இறுதி ஆண்டு தோ்வு நடத்தப்படும் மற்றும் முதுநிலைப் படிப்புக்கு வரும் மாணவா்கள் தோ்வு எழுதாமல் வரக்கூடாது என அரசும், பல்கலைக்கழகமும் அறிவித்துள்ளது. இந்த வகையில் மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வு நடைபெற்று கொண்டிருக்கும் போதே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தோ்வுகள் முடிந்த பின்பு, மீதமுள்ள செய்முறைத் தோ்வுகள் நடத்தப்படும் என்று துணைவேந்தா் வேல்ராஜ் செய்தியாளா்களை சந்தித்தபோது தெரிவித்துள்ளார்.