கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தில் முட்டை வழங்குவது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்களுக்கு திட்டத்தின் கீழ் முட்டை வழங்க வேண்டும் என்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதா என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் கடந்த வாரம் ஏராளமான உத்தரவுகளை பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம் அறிக்கைகளை தாக்கல் செய்ய சொல்லி இருந்தது. குறிப்பாக மாணவர்களுக்கு முட்டை வழங்குவது குறித்தும், மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்குவது குறித்த அறிக்கையை தமிழக அரசு நேற்று சென்னை உரிமை தாக்கல் செய்தது.
அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தில் மாணவர்களுக்கு முட்டை வழங்க முடியாது என்றும், சமூக விலகலை கடைபிடிப்பது இயலாத காரியம் எனவும் அரசு சார்பில் நீதிமன்றத்தில் தமிழக தெரிவித்ததற்கு நீதிபதிகள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்றால் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட போகிறீர்களா ? என்று தெரிவித்தது மட்டுமல்லாமல் மாணவர்களுக்கு முட்டை கண்டிப்பாக வழங்க வேண்டும் அது எப்படி வழங்க வேண்டும் ? என்பது அரசு தான் முடிவெடுக்க வேண்டும் அதற்கான திட்டமிடலை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
ஒரு நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்கிறது. இதனைத்தொடர்ந்து அறிக்கையின் அடிப்படையில் ஏதாவது உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நாளில் எப்படி அறிக்கை தயார் செய்வது ? என்ன மாதிரியான விஷயங்களை உள்ளடக்கி சொல்வது ? என்று தமிழக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் தமிழக அரசு தாக்கல் செய்யப் போகும் இந்த அறிக்கையை பொருத்து நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கும் என்று நம்பப்படுகிறது.