தமிழ்நாடு மின்வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக குறிப்பிட்ட நாட்களில் மின் வினியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த முழு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை
சென்னை மாதவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். அதன்படி ஜி. என். டி ரோடு பகுதி, புனித ஆனிஸ் பள்ளி மற்றும் கல்லூரி ஷெல் பெட்ரோல் பேங்க், மாபோக் தெரு மற்றும் பெரிய சாலை தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம்செய்யப்படும். அதேபோல மதுரவாயல் பகுதியில் மின் பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் துணை மின் நிலையம், தா. பழூர் துணை மின் நிலையம், உடையார்பாளையம் துணை மின் நிலையம் மற்றும் தழுதாழைமேடு துணை மின் நிலையம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களிலிருந்து மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், ஆமணக்கந்தோண்டி, குருவாலப்பர் கோயில், பிச்சனூர், வாரியங்காவல், தேவனூர், இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம், உடையார்பாளையம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், பரணம், சோழங்குறிச்சி, இடையாறு, த. மேலூர் த. பொட்ட கொல்லை மனகெதி, துளாரங்குறிச்சி, தா. பழூர், சிலால், வானதிரையன்பட்டினம், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கச்சி பெருமாள் நத்தம், நாயகனைப்பிரியாள், பொற்பதிந்தநல்லூர், இடங்கன்னி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, வேம்புகுடி, தென்னவநல்லூர், இடைக்கட்டு, ஆயுதக்களம், (தெற்கு – வடக்கு) தழுதாழைமேடு, வீரசோழபுரம், மெய்க்காவல் புத்தூர் மற்றும் துணை மின் நிலையங்களின் அருகில் உள்ள கிராம பகுதிகளிலும் இன்று காலை 9 மணிமுதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின் வினியோகம் இருக்காது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் அவினாசி துணை மின்நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. எனவே அவினாசி , வேலாயுதம்பாளை யம் , உப்பிலிபாளையம் , கருமாபாளையம் , செம்பியநல்லூர் , சின்னேரிபாளையம் , நம்பியம்பாளையம் , வேட்டு வபாளையம் , பழங்கரை , சீனிவாசபுரம் , முத்துச்செட்டிப் பாளையம் , காமராஜ்நகர் , சூளை , மடத்துப்பாளையம் , சேயூர் ரோடு , வ. உ. சி. காலனி , கிழக்கு , மேற்கு , வடக்கு ரதவீதிகள் , அவினாசி கைகாட்டிபுதூர் , சக்திநகர் , எஸ். பி. அப்பேரல் , குமரன் காலனி , ராக்கியாபாளையம் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படும்.
அதேபோல உடுமலையை அடுத்துள்ள கிழவன்காட்டூரில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை கல்லாபுரம், பூச்சிமேடு , இந்திரா புதூர், செல்வபுரம் , கொழமம் , குமரலிங்கம் , ருத்திரபாளையம் , பார்த்தசாரதிபுரம் , பெருமாள் புதூர், வி. ஜி. பேப்பர் மில்ஸ், ஆண்டிப்பட்டி, பாப்பம்பட்டி, அய்யம்பாளையம் எலையமுத்தூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நத்தம் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நத்தம் கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திராபட்டி, கோட்டையூர், சிறுகுடி, பூசாரிபட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய ஊர்களுக்கு மின்சாரம் இருக்காது.
மதுரை
மதுரை மாவட்டம் பேரையூர், சாப்டூர் துணை மின்நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பேரையூர் நகர் பகுதிகள், சந்தையூர், மேலப்பட்டி, கீழப்பட்டி, பாளைபட்டி, சென்னம்பட்டி, கூவலாபுரம், ராவுதம்பட்டி, மீனாட்சிபுரம், பி. அம்மாபட்டி, சாலிசந்தை, பி. ஆண்டிபட்டி, பழையூர், அத்திபட்டி, வண்டாரி, அணைக்கரைப்பட்டி, சின்னவண்டபுலி, அய்யம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
மதுரை வளா்நகா், பாண்டிகோவில் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஐடி பாா்க் இலந்தைக்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இலந்தைகுளம், பாண்டிகோவில், கோமதிபுரம், பண்ணை, மேலமடை, கண்மாய்பட்டி, செண்பகத்தோட்டம், உத்தங்குடி, உலகநேரி, ராஜீவ்காந்தி நகா், சோலைமலை நகா், வளா்நகா், ஆம்பளகாரப்பட்டி, டெலிகாம் நகா், பொன்மேனி காா்டன், ராம் நகா், பிகேபி நகா், ஆதீஸ்வரன் நகா் பகுதிகளில் இன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும்.
நெல்லை
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வீரவநல்லூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று நடைபெற உள்ளது. அந்த நாளில் மணிமுத்தாறு, அம்பாசமுத்திரம், வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்திலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் வினியோகம் இருக்காது.
தென்காசி
தென்காசி மாவட்டம் பெருமாள்பட்டி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று நடக்கிறது. இதன் காரணமாக பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம் கோவில்பட்டி, அருகன்குளம்புதூர், செந்தட்டியாபுரம், எட்டிச்சேரி, தென்மலை, அ. சுப்பிரமணியாபுரம், இடையான்குளம், முறம்பு, ஆசிலாபுரம், கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி , ரெட்டியாபட்டி, தெற்கு வெங்காநல்லூர், சோலைச்சேரி, வேலாயுதபுரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை மின்விநியோகம் இருக்காது.
அதேபோல தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவர்வடகரை உபமின்நிலையங்களில் இன்று மாதாந்திர பரமாரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனபடி தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம்பாறை, திரவியநகர், இராமசந்திரபட்டிணம், மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளைவலசை, பிரானூர், கரிசல், வல்லம், கற்குடி, புளியரை, தெற்குமேடு, மேக்கரை, பூலாங்குடியிருப்பு, புதூர், கட்டளைகுடியிருப்பு, சுரண்டை, இடையார்தவணை, குலையனேரி, ரெட்டைக்குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வீ. கே. புதூர், வாடியூர், கழுநீர்குளம், ஆனைகுளம், கரையாலனூர், அச்சங்குட்டம், சாம்பவர்வடகரை, சின்னத்தம்பிநடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, எம். சி. பொய்கை, துரைச்சாமிபுரம் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. அதன்படி மார்த்தாண்டம், காஞ்சிர கோடு , உண்ணாமலைக்கடை, பம்மம், திக்குறிச்சி, பேரை மற்றும் அதை சார்ந்த பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது.