Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணியின் போது மின் ஊழியர்கள் மற்றும் மின் பயனர்கள் பாதுகாப்பிற்காக பணிகள் முடியும் வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் மக்களுக்கு முன்னறிவிப்பு செய்து வருகின்றனர். அதனால் மக்கள் மின்தடை அறிந்து அதற்கேற்றது போல வேலைகளை செய்ய திட்டமிடுகின்றனர்.

சென்னை

சென்னை மாதவரம் பகுதியில் உள்ள செங்குன்றம் சோத்துப்பெரும்பெடு சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

சென்னை அம்பத்தூர் பகுதியில் பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அம்பத்தூர் தொழிற்போட்டை 3 வது மெயின் ரோடு, சின்ன காலனி, பெரிய காலனி, நக்கிரன் ரோடு, நடசேன் நகர், பள்ளி தெரு, ஆச்சி மசாலா தெரு, குப்பம் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும் மின்தடை ஏற்படும்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் வளவனுார் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக வளவனுார், சிறுவந்தாடு, செங்காடு, மோட்சகுளம், பனங்குப்பம், புதுப்பாளையம், நரையூர், மல்ராஜன்குப்பம், வெ. அகரம், வாணியம்பாளையம், பஞ்சமாதேவி, பூவரசன்குப்பம், குச்சிப்பாளையம், கல்லப்பட்டு, தாதம்பாளையம், அற்பிசம்பாளையம், ராமையன்பாளையம், மழவராயனுார், ஆழாங்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை விநியோகம் இருக்காது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி துணை மின்நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருக்காட்டுப்பள்ளி, பழமார்நேரி, நேமம், அகரப்பேட்டை, செய்யாமங்கலம், பாதிரகுடி, மாரநேரி, இளங்காடு, கச்சமங்கலம், கல்லணை, தோகூர், கோவிலடி, திருச்சென்னம்பூண்டி, சுக்காம்பார், பூண்டி, நாகாச்சி, விஷ்ணம்பேட்டை, பவனமங்கலம், கூத்தூர், மஹாராஜபுரம், சாத்தனூர், வடுகக்குடி, வளப்பக்குடி, மைக்கேல்பட்டி, கண்டமங்கலம், செந்தலை, மணத்திடல், நடுக்காவேரி, வெள்ளாம்பெரம்பூர், வரகூர், கருப்பூர், கடன்பன்குடி, அம்பதுமேல்நகரம் ஆகிய ஊர்களுக்கு மின் விநியோகம் இருக்காது.

தஞ்சை மாவட்டம் வீரமரசன் பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று  நடைபெறவுள்ளது.
இதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பூதலூர், செல்லப்பன் பேட்டை, மருதகுடி, புதுப்பட்டி, ஆவாரம்பட்டி, முத்துவீர கண்டியன்பட்டி, நந்தவனப்பட்டி, அய்யனாபுரம், சோலகம்பட்டி, ஓரத்தூர், சாமிநாதபுரம், சிவசாமிபுரம், விண்ணமங்கலம், ஆற்காடு, சித்திரக்குடி, மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது

தேனி

தேனி மாவட்டம் மாா்க்கையன்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளை நடைபெற இருப்பதால் இன்று காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மாா்க்கையன்கோட்டை, அய்யம்பட்டி, புலிக்குத்தி , கீழச்சிந்தலைச்சேரி, மேலசிந்தலைச்சேரி, பல்லவராயன்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திருத்தங்கல் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் திருத்தங்கல் நகர், செங்கமலநாட்சியார்புரம், கீழதிருத்தங்கல், ஸ்டேட் பேங்க் காலனி, சாரதா நகர், பூவநாதபுரம், வடபட்டி, நடுவப்பட்டி, ஈஞ்சார், தேவர்குளம், சுக்கிரவார்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் சுக்கிரவார்பட்டி, அதிவீரன்பட்டி , நமஸ்கரித்தான்பட்டி, சாணார்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

 

Categories

Tech |