Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணியின் போது மின் ஊழியர்கள் மற்றும் மின் பயனர்கள் பாதுகாப்பிற்காக பணிகள் முடியும் வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் மக்களுக்கு முன்னறிவிப்பு செய்து வருகின்றனர். அதனால் மக்கள் மின்தடை அறிந்து அதற்கேற்றது போல வேலைகளை செய்ய திட்டமிடுகின்றனர்.

சென்னை

சென்னை மின்வாரியப் பராமரிப்புப் பணி காரணமாக கீழ்பாக்கம் அதனை சுற்றி உள்ள இடங்களில் இன்று  9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி கீழ்ப்பாக்கம் கார்டன் விரிவு, கே. எச். ரோடு, தாகூர் நகர், அயனாவரம், அண்ணா நகர் ஓ. எல். பிளாக், நியூ கொளத்தூர் துணை மின் நிலையம் பகுதி மற்றும் மேற்கு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அதேபோல அம்பத்தூர் பகுதியில் உள்ள கொரட்டூர், நொளம்பூர் பகுதியில் மின் பராமரிப்பு பணி காரணமாக இன்று  காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று சூளகிரி துணை மின் நிலையம் மற்றும் காமன்தொட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் இந்த மின் நிலையங்கள் இருந்து விநியோகம் செய்யும் சூளகிரி நகர், உலகம், மாதரசனபபள்ளி, ஏனுசோனை, சின்னார், சாம்பல்பள்ளம், பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, காளிங்காவரன், சிம்பில்திராடி, காமன்தொட்டி, கோனேரிப்பள்ளி, பத்தகோட்டா, ஆகிய பகுதிகளுக்கும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 14 மணி வரை பென்னாகரம், அக்ரகாரம், மடம், ஏரியுர், ஒகேனக்கல், அதகபாடி, சத்தியநாதபுரம், நல்லாம்பட்டி, தாசம்பட்டி, ஐக்கம்பட்டி, பாப்பாரபட்டி, இண்டூர், இராமகொண்ட அள்ளி, பிக்கிலி, பெரும்பாலை, மற்றும் அதை சுற்றிள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

தஞ்சை

தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டை துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருங்குளம் ஈச்சங்கோட்டை நடுவூர் சூரியம் பட்டி வல்லுண்டான்பட்டு கொல்லாங்கரை வேங்கராயன் குடிகாடு கோவிலூர் வடக்கூர் பொய்யுண்டார்கோட்டை செல்லம்பட்டி துறையூர் சூரக்கோட்டை வாண்டையார் இருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவரம்பூர் துணை மின் நிலைய பகுதிகளும், கே சாத்தனூர் துணை மின் நிலைய பகுதிகளிலும் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் தடை செய்யப்படும்.

திருப்பூர்

திருப்பூர் சந்தைப்பேட்டை துணைமின்நிலையம் காங் கேயம் பீடரில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை , புஷ்பா நகரில் சாய்ந்து நிற்கும் மின்மாற்றியை சரி செய்யும் பணி நடைபெற உள்ளது. எனவே இன்று  காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நொய்யல்வீதி , காங்கே யம் கிராஸ் ரோடு , புஷ்பா நகர் , குமாரசாமி காலனி , பாலாஜி நகர் , கே. ஜி. புதூர் , சுப்பிரமணியம் நகர் , பொன்னம்மாள் லே அவுட் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடைபடும்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தின் ராஜபாளையம், நல்லமநாயக்கன்பட்டி உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று  ராஜபாளையம், நல்லமநாயக்கன்பட்டி உபமின் நிலையம் மூலமாக மின் வினியோகம் பெரும் பகுதிகளான சோழபுரம், தேசிகாபுரம், நல்லமநாயக்கன்பட்டி, கிழவி குளம், சங்கரலிங்காபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தாள்புரம், முதுகுடி, அயன்கொல்லங்கொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், காமாட்சியாபுரம், ஆசிலாபுரம், தெற்கு வெங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

தென்காசி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் மின் நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், கரிவலம்வந்தநல்லூர் பனையூர், குவளைக் கண்ணி, கோமதி முத்து புரம், இடையங்குளம், சென்னிகுளம், துரைச்சாமிபுரம், சுப்புலாபுரம், செவல்பட்டி ஆகிய ஊர்களுக்கு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை துணை மின்நிலைய பகுதியில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூர்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவார், விளவங்கோடு, கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு ஆகிய பகுதிகளுக்கும் அதைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

 

Categories

Tech |