தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணியின் போது மின் ஊழியர்கள் மற்றும் மின் பயனர்கள் பாதுகாப்பிற்காக பணிகள் முடியும் வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் மக்களுக்கு முன்னறிவிப்பு செய்து வருகின்றனர். அதனால் மக்கள் மின்தடை அறிந்து அதற்கேற்றது போல வேலைகளை செய்ய திட்டமிடுகின்றனர்.
சென்னை
சென்னை பல்லாவரத்தில் மின்வாரியப் பராமரிப்புப் பணி காரணமாக பல்லாவரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பழைய சந்தை ரோடு, காவலர் குடியிருப்பு, சீனிவாச பெருமாள் கோவில் தெரு, பெரியபாளையத்தம்மன் கோவில் தெரு, செல்லம்மாள் தெரு, ஆஞ்சநேயர் கோவில் தெரு ஆகிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அதேபோல மின் பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னை பெரம்பூரில் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி பெரம்பூர் /காகித ஆலை ரோடு பகுதி: காமராஜ் தெரு, ராகவன் தெரு, மல்லிப்பூ நகர், பாதம் தெரு, ஏழுமலை தெரு, ஜானகிராம நகர் 4 மற்றும் 5வது தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளில் மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
மேலும் சிறுசேரி பகுதியில் சிறுசேரி கிராமம், எக்ஸ்.எல் ரியல் அப்பார்ட்மென்ட், சபரி பிளாட்ஸ், வேல்ஸ் கல்லூரி சாலை ஆகிய இடங்களிலும் பெரம்பூர் /காகித ஆலை ரோடு பகுதியில் காமராஜ் தெரு, ராகவன் தெரு, மல்லிப்பூ நகர், பாதம் தெரு, ஏழுமலை தெரு, ஜானகிராம நகர் 4 மற்றும் 5வது தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகளிலும் பொன்னேரி பகுதியில் தமிழ்நாடு குடியிருப்பு வாரியம் மற்றும் கங்கன் தொட்டி பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டம் தேவரடியார்குப்பம் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக மணலுார் பேட்டை, தேவரடியார்குப்பம், அத்தியந்தல், கர்ணாசெட்டிதாங்கல், ஜம்பை, பள்ளிச்சந்தல், காங்கியனுார், முருக்கம்பாடி, கொங்கணாமூர், சாங்கியம், கழுமரம், சொரையப்பட்டு, விளந்தை, சித்தாமூர், கூவனுார், அருதங்குடி, மெலாரிப்பட்டு போன்ற பகுதிகளில் இன்று காலை 9: 00 மணி முதல் மதியம் 2: 00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் வடுவூா், கோவில்வெண்ணி ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால், மேற்குறிப்பிட்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான, வடுவூா், சாத்தனூா், நெய்வாசல், புள்ளவராயன்குடிக்காடு, கோவில்வெண்ணி, நகா், நீடாமங்கலம், காளாச்சேரி, முன்னவால்கோட்டை, மேலபூவனூா், நத்தம், ஆதனூா், சோனாப்பேட்டை, கொட்டையூா், அம்மாபேட்டை, கருப்பு முதலியாா்கோட்டை, மணக்கால், அரித்துவாரமங்கலம், சித்தமல்லி, மாணிக்கமங்கலம், கிளியூா், சோ்மாநல்லூா், முனியூா், அவலியாநல்லூா் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
குடவாசல் துணைமின் நிலையத்தில் இன்று காலை 9 முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான குடவாசல், காங்கேயநகரம், செம்மங்குடி, மணலகரம், திருவிடைச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என குடவாசல் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளா் எஸ். உஷா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
திருமக்கோட்டை துணைமின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக, இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான திருமக்கோட்டை, மேலநத்தம், பாலையக் கோட்டை, தென்பரை, ராதாநரசிம்மபுரம், ராஜகோபாலபுரம், கோவிந்தநத்தம், பெருமாள்கோவில்நத்தம், மான்கோட்டை நத்தம், வல்லூா், பரசபுரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் உடுமலை துணை மின் நிலையம் பகுதியில் இன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை உடுமலை நகரம் , பழனி ரோடு, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம் பாளையம் , ஆர் வேலூர், கணபதிபாளையம், வெனஸ் பட்டி, தொட்டம்பட்டி, பொட்டையம்பாளையம் , பொட்டி நாயக்கனூர், புக்குளம் , குறிஞ்சேரி , சீன்னவீரம்பட்டி , வெள்ளியம்பாளையம், பொன்னேரி, கோட்டமங்கலம், சங்கர்நகர், அய்யம்பாளையம் புதூர், காந்தி நகர் , சிந்துநகர், ஸ்ரீராம் நகர், ஜீவா நகர், அரசு கலைக்கல்லூரி பகுதி, போடிபட்டி, பள்ளபாளையம், அங்கலக்குறிச்சி, குறிச்சிக்கோட்டை ஆகிய பகுதிகளில் மின்தடை இருக்கும்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் இன்று மாதாந்திர மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக மதுரை மாட்டுத்தாவணி, லேக்ஏரியா, கே.கே நகர், தொழிற்பேட்டை, அண்ணாநகர், ராமவர்மாநகர், பி.ஆர். சி., நகர், மேலமடை, அன்புநகர், சதாசிவநகர், அழகர்கோவில் மெயின் ரோடு, கற்பகநகர், லுார்துநகர், காந்திபுரம், சர்வேயர்காலனி, சூர்யாநகர், மின்நகர், கொடிக்குளம், அல்அமின்நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, நாகுடி, அழியாநிலை, கீரமங்கலம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக அறந்தாங்கி, அழியாநிலை, சிலட்டூர், சிதம்பரவிடுதி, குரும்பூர், மறமடக்கி, ரத்தினக்கோட்டை, ஆளப்பிறந்தான், இடையார், கம்மங்காடு, துரையரசபுரம், பஞ்சாத்தி, குண்டகவயல், நாகுடி, அத்தாணி, தொண்டைமானேந்தல், மேல்மங்கலம், பெருங்காடு, மேலப்பட்டு, தினையாகுடி, கட்டுமாவடி, வல்லவாரி, அரசர்குளம், சுப்ரமணியபுரம், கீரமங்கலம், மேற்பனைக்காடு, குளமங்கலம், சேந்தன்குடி, வேம்பங்குடி, கொடிக்கரம்பை, காசிம்புதுப்பேட்டை, எல்என்புரம், பனங்குளம், செரியலூர் இனாம், செரியலூர் ஜமீன், ஆவணத்தாங்கோட்டை, ராஜேந்திரபுரம், பெரியாளூர், குளமங்கலம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.