Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் இன்று அனுமதி இல்லை – அதிரடி உத்தரவு 

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல கட்டங்களாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சில தளர்வுகளோடு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தொடரும் என மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியிருந்தது. இதற்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் இருந்த கட்டுப்பாடுகள் இதில் தளர்த்தப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு ஏற்கனவே சுற்றைக்கை வழங்கியிருந்தது. அதன்படி நாடு முழுவதும் கடந்த ஊரடங்கு வரை தடை விதிக்கப்பட்டு இருந்த யோகா,  உடற்பயிற்சி கூடங்கள் இந்த ஊரடங்கில் செயல்பட அனுமதி என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குறிப்பாக நாடு முழுவதும்  இன்று முதல் (5ம் தேதி) சமூக இடைவெளியுடன் செயல்படலாம்என்றும், கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்கவேண்டும், சனிடைசர் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று அதற்கென்று சில வழிமுறைகளை மத்திய அரசு கொடுத்துள்ளது. ஆனால் தமிழகத்தில் இதற்கான உத்தரவை இல்லை. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகம் உள்ள காரணத்தால் யோகா, உடல்பயிற்சி மையங்கள் திறக்க அனுமதி இல்லை என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |