சென்னை பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வைகுண்ட ஏகாதசி தினமானது இன்றைய தினம் கட்டுப்பாடுகளும் கோவில்களில் வழிபாடு செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் வருகின்ற 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வடபழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.