தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை இன்று முதல் திறக்கலாம் என்றும், 50 சதவிகித இருக்கைகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
டாஸ்மார்க் மேலாண் இயக்குனர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் பார்களை இன்று ( செவ்வாய்க்கிழமை ) முதல் திறக்க அனுமதி அளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பார் ஊழியர்களுக்கும், பார்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளையும் டாஸ்மார்க் விதித்துள்ளது.
அதன்படி காய்ச்சல் கண்டறியும் கருவியின் மூலம் சோதனை, சானிடைசரை தானியங்கி இயந்திரத்தில் பெரும் வகையில் அமைக்க வேண்டும். நோய்த்தொற்று இல்லாதவர்களையே அனுமதிக்க வேண்டும். பணியாளர்கள் ஒரு முறை பயன்படுத்த கையுறைகளை அணிய வேண்டும். குறைந்தபட்சம் 6 அடி தூரம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பாருக்களுக்கு உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் தனித்தனி வழிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.