Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

தமிழ்நாடு  மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஏப்ரல் 1) ஒரு சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

சென்னை:
சென்னையில் பராமரிப்புப் பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை  முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தாம்பரம் பகுதி: கடப்பேரி ஆர்.பி ரோடு பகுதி, வேல்முருகன் தெரு, சரஸ்வதி நகர் ஈ.டி.எல் காமக்கோடி நகர், ஏ.ஜி.எஸ் காலனி, வி.ஜி.பி சாந்தி நகர், சார்ச் அவென்யூ, காந்தி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள். அடையாறு/காந்திநகர் பகுதி: காமராஜ் அவென்யூ 1 மற்றும் 2 தெரு, கே.பி நகர் 4, 7 மற்றும் 8 மெயின் ரோடு, இந்திரா நகர் 7 முதல் 15 வரை குறுக்கு தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

போரூர் பகுதி: பூந்தமல்லி ஜெ.ஜெ நகர், லீலாவதி நகர், ஆவடி மெயின் ரோடு ஒரு பகுதி காவனூர் பொன்னியம்மன் நகர், சின்ன தெரு, நடைப்பாதை தெரு, சேக்கிலார் நகர், ஒண்டி காலனி, சரவணா நகர், திருப்பதி நகர், மேத்தா நகர் காரம்பாக்கம் ஆர்.இ நகர், ஆபீசர் காலனி, ஆற்காடு ரோடு ஒரு பகுதி கெருகம்பாக்கம் சுலோச்சன நகர், பூமாதேவி நகர், லட்சுமி நகர், குன்றத்தூர் மெயின் ரோடு மணப்பாக்கம் ஆர்.இ நகர், கிருஷ்ணா நகர், சித்தார்த் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி பகுதி: மடிப்பாக்கம், மடுவான்கரை, ஆண்டாள் நகர், இந்திரா நகர், திலகர் அவென்யூ மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

செம்பியம் பகுதி: தணிகாசலம் நகர், சுந்தரமூர்த்தி தெரு, எத்திராஜ் தெரு, செல்வம் நகர், காமராஜர் சாலை, மூலக்கடை சந்திப்பு, ஜம்புலி தெரு, நேதாஜி நகர், மணலி நெடுஞ்சாலை ரோடு, அம்பிகா நகர், லட்சுமியம்மன் கோயில் தெரு, பார்வதி நகர், செந்தில் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தண்டையார்பேட்டை/காலடிப்பேட்டை பகுதி; டி.எச் ரோடு பகுதி, ராஜாக்கடை, எல்லையம்மன் கோயில் தெரு, எண்ணூர் எக்ஸ்பிரஸ் ரோடு, திலகர் நகர், பி.கே.என் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

நாமக்கல் மாவட்டம்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதன்சந்தை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துபாளையம், ஏளூா், தத்தாத்திரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொழிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, ஏ.பு.பாளையம், களங்காணி, காரைக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |