Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல்…. குறைந்த விலையில் தக்காளி…. இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் மழைப்பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு பருவ மழையின்போது தக்காளியின் விலை அதிகரித்ததால் தமிழகத்தில் உள்ள 65 கூட்டுறவு பசுமைப் பண்ணை கடைகள் மூலமாக தக்காளிகளை 45 முதல் 55 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டன. அதனால் தக்காளியின் விலை சந்தைகளில் வெகுவாக குறைந்தது. அதனைப்போலவே தற்போது தக்காளி விலை அதிகரித்து இருப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பசுமை பண்ணை கூட்டுறவு அங்காடிகள் மூலமாக தக்காளி வினியோகம் செய்ய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று முதல் நாள் ஒன்றுக்கு 4 மெட்ரிக் டன் தக்காளிகள் கொள்முதல் செய்யப்பட்ட ஒரு கிலோ 70 முதல் 85 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். சந்தையில் மற்றும் சில்லரை விற்பனைக் கடைகளை விட பசுமை பண்ணை கூட்டுறவு அங்காடியில் குறைவான விலையில் தக்காளி கிடைப்பதன் மூலமாக இனி வரும் நாட்களில் மக்கள் கூட்டம் இங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது m

Categories

Tech |