தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களிடம் இன்றுக்குள் கருத்து கேட்பு கூட்டத்தை முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடிக்கிடக்கின்றன. சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இன்னமும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக மாணவர்களின் பெற்றோர்களிடம் நேற்று முதல் நாளை மறுதினம் வரை கருத்து கேட்பு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த கூட்டத்தை இன்று முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை திடீரென உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் கருத்துகளை கேட்டு தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.