தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூலை 11) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருப்பூர்
திருப்பூர் வஞ்சிப்பாளையம் துணைமின்நிலையத்தில் சொர்ணபுரி பீடர் உயர் அழுத்த மின்பாதையில் அமைந்துள்ள தாமரை கார்டன் , நவரத்தின அப்பார்ட்மெண்ட் , சோளி பாளையம் , பாரதிநகர் , பாட்டையப்பன் நகர் , விநாய கப்பா நகர் , பொதிகை நகர் , சொர்ணபுரி அவென்யூ , என்குளோவ் , லோட்டஸ் மகால் பகுதிகளில் மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடைபடும். இதேபோன்று தாராபுரம், வடுகபட்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான வடுகபட்டி, குமாரபாளையம், மூக்கு தரிச்சாம்பாளையம் சுள்ளிபெரிக்காம்பாளையம், செம்மங்கரை, வண்ணாபட்டி, பட்டுதுறை, வரப்பட்டி, நீலாங்காளிவலசு மற்றும் பி. ராமபட்டிணம் இதுசார்ந்த பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 2. 00 மணி வரை மின் விநியோகம் இருக்காது
கானூர்புதூர், பசூர் துணை மின் நிலையங்களுக்குட்பட்ட கானூர், அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதூர், ஆலத்தூர், தொட்டிபாளையம், குமாரபாளையம், மொண்டிபாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி, பெத்தநாயக்கன்பாளையம் ஒரு பகுதி, பசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனூர், ஆயிமாபுதூர், ஒட்டர்பாளையம், ஜீவாநகர், அன்னூர், மேட்டுப்பாளையம், மேட்டுக்காட்டுபுதூர், அம்மாசெட்டிபுதூர், புதுப்பாளையம், பூலுவபாளையம் பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும்.
தூத்துக்குடி
திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. தூத்துக்குடி நகர்ப்புற கோட்டத்துக்கு உட்பட்ட திரேஸ்புரம் ரவுண்டானா, போலீஸ் குடியிருப்பு, தெற்கு பீச் ரோடு, கிரகோப் தெரு, தெற்கு ராஜா தெரு, எம்பரர் தெரு, பெரியகடை தெரு, விக்டோரியா தெரு, வண்ணார் 1,2,3-வது தெரு, ஜார்ஜ் ரோடு, கணசேபுரம், பாத்திமா நகர், தாமோதரநகர், சண்முகபுரம் பிராப்பர், பெருமாள் தெரு, இந்திரா நகர், வாடி தெரு,
ஆதிபராசக்தி நகர், சங்கரப்பேரி விலக்கு முதல் புதூர்பாண்டியாபுரம் வரை உள்ள எட்டயபுரம் ரோடு பகுதிகள், தபால் தந்தி காலனி, அண்ணா நகர் 1 முதல் 7-வது தெரு வரை, சிதம்பர நகர், சுப்பையா முதலியார் புரம், மடத்தூர், இ.பி.காலனி, மதுரை பைபாஸ் ரோடு, முத்தையாபுரம் அருகே உள்ள அபிராமி நகர், ராஜீவ் நகர், பாலாஜி நகர், சாமி நகர், தேவகி நகர், முள்ளக்காடு, ஜே.எஸ்.நகர், சுந்தர் நகர், பாரதி நகர், தவசி பெருமாள் சாலை, திருச்செந்தூர் மெயின் ரோடு, பொன்னாண்டி நகர், காலாங்கரை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி மின்சாரம் இருக்காது.
விருதுநகர்
விருதுநகர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட விருதுநகர் மேலரதவீதி, சேக்கிழார் தெரு, பெசிதெரு, போஸ்ட் ஆபீஸ் தெரு, மெயின் பஜார் தெற்கு பகுதி, மதுரை ரோடு, கச்சேரி ரோடு, கணேஷ் நகர், வேலுச்சாமி நகர், லட்சுமி காலனி, கே.ஆர்.கார்டன், கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி பகுதி, பத்திரப்பதிவு அலுவலகப் பகுதி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1;30 மணி மின்மினியோகம் நிறுத்தப்படும். இதேபோன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை குமாரலிங்கபுரம், வீரச்செல்லையாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
மல்லாங்கிணறு துணை மின் நிலையத்திற்குட்பட்ட வில்லிபத்திரி, வரலொட்டி, மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும். பெரியவள்ளிக்குளம் துணைமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான ரோசல்பட்டி, குமாரபுரம், கே.கே.எஸ். எஸ்.என். நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும். துலுக்கப்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும்பகுதிகளான வச்சக் காரப்பட்டி, பட்டம்புதூர், குப்பாம்பட்டி, மலைப்பட்டி, கூத்திப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட மில்லத் நகர், நாகப்பாடி, அரசந்தாங்கள், அடிவாரம், முறையார், தேவனந்தல், வேடம் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 12 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.
திருவள்ளூர்
செங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான விவேக்பாரா அவென்யூ, ஜோதி நகர், மகாலட்சுமி நகர், மருதுபாண்டி நகர், பம்மதுக்குளம், அன்னை இந்திரா நினைவு நகர், எம். ஜி. ஆர். , நகர், நாகத்தம்மா நகர், அம்பேத்கர் நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகில் காலை முதல் மதியம் 2 மணி வரைமின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. அம்பத்துார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான அண்ணனுார், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அய்யப்பாக்கம், வளையபதி பாடி புது நகர், கலெக்டர் நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான திருமுல்லைவாயில், திருவள்ளுவர் தெரு, திருமலை நகர், குளக்கரை தெரு, காமராஜ் நகர், குமரன் நகர், பட்டேல் தெரு, புத்தர் தெரு, பட்டாபிராம், பாரதியார் நகர், ஐ. ஏ. எப். , ரோடு, காந்தி நகர், திருவள்ளுவர் நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகில் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
திண்டுக்கல்
நத்தம் உப மின்நிலையத்திற்குட்பட்ட நத்தம், கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, பொய்யாம்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திராப்பட்டி, கோட்டையூர், சிறுகுடி, பூசாரிபட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி, மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்சாரம் வினியோகம் தடை செய்யப்படும். தாமரைபாடி துணை மின் நிலையத்திற்குட்பட்ட தாமரைப்பாடி முள்ளிப்பாடி, புதுப்பட்டி, பாடியூர், கூட்டாத்துப்பட்டி, பெரியகோட்டை, வேல்வார்கோட்டை, முத்தனன்கோட்டை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது
கடலூர்
குறிஞ்சிப்பாடி அருகே சேப்ளாநத்தம் துணை மின் நிலையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கோட்டகம், மேட்டுக்குப்பம், சீராங்குப்பம், பார்வதிபுரம், மாருதிநகர், கல்பட்டு, அய்யாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
கன்னியாகுமரி
கீரிப்பாறை உயர் அழுத்த மின்பாதையில் மின்சாரம் பெறும் பகுதிகளான கொத்தளம் , பள்ளம் , பால்குளம் , வாழயத்துவயல் , கூவை காட்டுமலை , வெள்ளாம்பி , கீரிப்பாறை மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. கொட்டாரம் உபகோட்டத்திற்கு உட்பட்ட தெங்கம்புதூர் , பணிக்கன் குடியிருப்பு , காற்றாடித்தட்டு , இலந்தையடிதட்டு ஆகிய பகுதிகளுக்கு இன்று காலை 9. 30 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.