Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று(ஜூலை 16)…. இங்கெல்லாம் கரண்ட் இருக்காது…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று(ஜூலை 16) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மயிலாடுதுறை மாவட்டம்:

சீர்காழி கோட்டம் வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பொறையார், ஆச்சாள்புரம், அரசூர், எடமணல் மற்றும் கிடாரம்கொண்டான் துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில்  இன்று மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில், “ கடலங்குடி 230 கே வி துணை மின் நிலையத்தில் புதிதாக கெபாசிட்டர் பேங்க் நிறுவும் பணி மற்றும் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அந்த மின் நிலையத்திலிருந்து பயன்பெறும் சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட வைத்தீஸ்வரன்கோவில், திருவெண்காடு, பொறையார், ஆச்சாள்புரம், அரசூர்,எடமணல் மற்றும் கிடாரம் கொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு  இன்று காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

மதுரை மாவட்டம்:

மதுரை மேலூர் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், அந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் மேலூர், டி.வள்ளாலப்பட்டி, பெரிய சூரக்குண்டு, சின்ன சூரக்குண்டு, நாகலிங்கபுரம், விநாயகபுரம், வண்ணாம்பாறைப்பட்டி, நாவினிப்பட்டி, பதினெட்டாங்குடி, கொட்டக்குடி, ஆண்டிபட்டி, ஆட்டுக்குளம், சத்யபுரம், மேலப்பட்டி மற்றும் அதற்கு உள்பட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ராஜா காந்தி தெரிவித்துள்ளார்.

மாட்டுத்தாவணி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. எனவே மின்நிலையத்திற்கு உட்பட்ட அண்ணா பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக வளாகம், காந்தி மியூசியம், கரும்பாலை பகுதிகள், டாக்டர் தங்கராஜ் சாலை, மடீட்சியா, அண்ணா மாளிகை, எஸ்.பி.ஐ. குடியிருப்பு பகுதிகள், காந்திநகர், மதிச்சியம், ஷெனாய்நகர், குருவிக்காரன் சாலை, கமலாநகர், மருத்துவக்கல்லூரி, பனகல் ரோடு, அமெரிக்கன் கல்லூரி, அரசு ராஜாஜி மருத்துவமனை, வைகை வடகரை, ஆழ்வார்புரம், கல்பாலம்ரோடு, கோரிப்பாளையம், ஜம்புரோபுரம், மாரியம்மன் கோவில்தெரு, சின்னக்கண்மாய் தெரு, எச்.ஏ. கான்ரோடு, ஈ2.ஈ2 ரோடு, ஓ.சி.பி.எம். பள்ளி, செல்லூர் பகுதிகள், பாலம் ஸ்டேசன்ரோடு, கான்சாபுரம், பி.எஸ்.என்.எல்., தல்லாகுளம், ராஜம் பிளாசா பகுதிகள், யூனியன் கிளப் மற்றும் தமுக்கம் பகுதிகள்.

மீனாட்சிபுரம்

சேவாலயம் ரோடு, ஆர்.ஆர். மண்டபம், இஸ்மாயில்புரம், முனிச்சாலை ரோடு, கண்ணாபோர்டிங், ஆட்டுமந்தை பொட்டல், வெற்றிலைபேட்டை, சுங்கம் பள்ளி வாசல், யானைக்கல் (ஒருபகுதி), 50 அடிரோடு, போஸ்வீதி, குலமங்கலம் ரோடு, பூந்தமல்லி நகர், ஜுவா ரோடு, மீனாட்சிபுரம், சத்தியமூர்த்தி 1,2,3,4,5,6,7-வது தெருக்கள், சரஸ்வதி தியேட்டர் பகுதிகள், தாமஸ்வீதி, நரிமேடு மெயின்ரோடு, சாலை முதலியார் ரோடு, பிரசாத் ரோடு, நேரு பள்ளி பகுதிகள், அன்னைநகர், எஸ்.என்.ஏ. அப்பார்ட்மெண்ட், எல்.ஐ.ஜி. காலனி, பள்ளிவாசல் தெரு, மவுலானா சாகிப் தெரு, முத்துராமலிங்க தேவர் தெரு, கே.டி.கே. தங்கமணி தெரு, மாட்டுத்தாவணி லேக் ஏரியா, தொழிற்பேட்டை ஏரியா, அண்ணாநகர், ராமவர்மா நகர், பி.ஆர்.சி. புதூர், மேலமடை, அன்புநகர், சதாசிவநகர், அழகர் கோவில் மெயின்ரோடு, கற்பகநகர், லூர்துநகர், காந்திபுரம், சர்வேயர் காலனி, சூர்யாநகர், மின்நகர், கொடிக்குளம், அல்அமின்நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம்:

திருப்பூர், பல்லடம், வீரபாண்டி, ஆண்டிப்பாளையம், குமார்நகர், சந்தைப்பேட்டை,பலவஞ்சிபாளையம் ஆகிய துணை மின்நிலைய பகுதிகளில் இன்று  மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. திருப்பூர், வீரபாண்டி, ஆண்டிப்பாளையம், குமார்நகர், சந்தைப்பேட்டை, பலவஞ்சிபாளையம் ஆகிய துணை மின்நிலைய பகுதிகளில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் வருமாறு:-

வீரபாண்டி, ஆண்டிப்பாளையம்

வீரபாண்டி துணை மின்நிலையத்திற்குட்பட்ட வீரபாண்டி, பாலாஜிநகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிப்பாளையம், (வாய்க்கால்மேடு) குளத்துப்பாளையம், கரைபுதூர், குப்பாண்டம்பாளையம், எம்.ஏ.நகர், லட்சுமிநகர், சினனக்கரை, முல்லைநகர், டி.கே.டி.மில்.

ஆண்டிப்பாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட இடுவம்பாளையம், ஆண்டிப்பாளையம், முத்துநகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவாநகர், சின்னியகவுண்டன்புதூர், கே.என்.எஸ்.நகர், முல்லை நகர், இடும்பன் நகர், ஆர்.கே.காட்டன் ரோடு, காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிப்பாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர்,லிட்டில் பிளவர் நகர்.

குமார்நகர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட ராமமூர்த்திநகர், பி.என்.ரோடு, ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி.நகர், கொங்குநகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகர், கொங்கு மெயின் ரோடு, வ.ஊ.சி. நகர், டி.எஸ்.ஆர்.லே அவுட், முத்துநகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம்,என்.ஆர்.கே.புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 அடி ரோடு, இட்டேரி ரோடு, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, திருமலை நகர், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ் நிலையம் மற்றும் லட்சுமிநகர்.

சந்தைப்பேட்டை துணை மின்நிலையத்திற்குட்பட்ட அரண்மனைபுதூர், தட்டான் தோட்டம், எம்.ஜி.புதூர், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரீப் காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.நகர், கே.எம்.ஜி. நகர், பட்டுக்கோட்டையார் நகர், திரு.வி.க.நகர், கருப்பகவுண்டம்பாளையம், கோபால்நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி. நகர், கே.வி.ஆர்.நகர், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, பெரியார் காலனி, சபாபதி புரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில் ரோடு, மிஷின்வீதி, காமராஜ் ரோடு, புதுமார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, காதர்பேட்டை, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதூர் மெயின் ரோடு, தாராபுரம் ரோடு ஆகிய பகுதிகள்.

பலவஞ்சிபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட சந்திராபுரம், கரட்டாங்காடு, செரங்காடு, டி.ஏ.பி.நகர், என்.பி.நகர், காளிநாதம்பாளையம், பலவஞ்சிபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் தடைசெய்யப்படும்

பல்லடம் நாரணாபுரம், பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேடபாளையம், 63வேலம்பாளையம், வலையபாளையம், ஆறுமுத்தாம்பாளையம், நாரணாபுரம், அறிவொளி நகர், சேகாம்பாளையம், ஆட்டையம்பாளையம், தெற்குபாளையம், கல்லம்பாளையம், இந்திராநகர், மங்கலம் ரோடு ஒரு பகுதி, பனப்பாளையம், மாதப்பூர்,கணபதிபாளையம், குங்குமம்பாளையம், சிங்கனூர், பெத்தாம்பாளையம், நல்லா கவுண்டம்பாளையம், மாதேஸ்வரன் நகர், ராயர்பாளையத்தின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.

தூத்துக்குடி மாவட்டம்:

கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கழுகுமலை, கோவில்பட்டி, எப்போதும் வென்றான், விஜயாபுரி, கோவில்பட்டி சிட்கோ, எம். துரைசாமி புரம், செட்டி குறிச்சி, சன்னது புதுக்குடி ஆகிய உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை நடைபெற உள்ளது. எனவே, காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கண்ட உபமின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் செய்யப்படும் நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு மின்தடை செய்யப்படும்,

திண்டுக்கல் மாவட்டம்:

ஒட்டன்சத்திரத்தில் சனிக்கிழமை (ஜூலை 16) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே ஒட்டன்சத்திரம், புதுஅத்திக்கோம்பை, விருப்பாட்சி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி,புலியூா்நத்தம், லெக்கையன்கோட்டை, காளாஞ்சிப்பட்டி, அரசப்பிள்ளைபட்டி, அம்பிளிக்கை, வடகாடு மலைக்கிராமங்களில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

திருப்பத்தூா் மாவட்டம்:

நேரம்: காலை 9 முதல் மாலை 5 மணி வரை.

மின்தடை பகுதிகள்; கொரட்டி, சுந்தரம்பள்ளி, குனிச்சி, லக்கிநாயக்கன்பட்டி, குமாரம்பட்டி, காமாட்சிபட்டி, எலவம்பட்டி, மைக்காமேடு, தாதகுள்ளனூா், கவுண்டப்பனூா், காக்கங்கரை , கண்ணாலப்பட்டி, சு.பள்ளிப்பட்டு, பல்லப்பள்ளி, அரவமட்றப்பள்ளி, பெரியகரம், கசிநாயக்கன்பட்டி, செவ்வாத்தூா், தோரணம்பதி, பஞ்சனம்பட்டி, புதூா், பச்சூா், மிட்டூா், ஆண்டியப்பனூா், லாலாபேட்டை, ஓம்குப்பம், நாச்சியாா்குப்பம், இருனாபட்டு, பாப்பானூா், பூங்குளம், பலபந்தம், ஜல்தி, பள்ளத்தூா், ரெட்டிவலசை, குண்டுரெட்டியூா், நஞ்சப்பனேரி, டேம் வட்டம், ராணிவட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம்:

பூட்டு தாக்கு, ஆனை மல்லூர், தாமரைப்பாக்கம் புதுப்பாடி ஆகிய துணை மின் நிலையங்கள் மின்சாதன பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை ஆற்காடு டவுன், ஹவுசிங் போர்டு, வேப்பூர், விசாரம் நந்தியாலம், தாழனூர், ராமநாதபுரம், கூராம்பாடி, உப்பு பேட்டை, கிருஷ்ணாவரம், லப்பப்பேட்டை, 30 வெட்டி தாஜ்புரா, தக்காண்குளம், களர், கத்திய வாடி கீழ்குப்பம், அருங் குன்றம், ஆயிலம் புதூர், ராமாபுரம், பூட்டுத்தாக்கு, ரத்தினகிரி, கன்னிகாபுரம், சனார் பண்டை மேல குப்பம், கீழ் செங்காநத்தம், மேல் செங்காநத்தம் மற்றும் திமிரி, விளாப் பாக்கம், காவனூர், சாத்தூர், தாமரைப்பாக்கம், வளையாத்தூர், மோசூர், பாலமதி, புங்கனூர், பழையனூர், சக்கரமல்லூர், கடப்பந்தாங்கல், கிளம்பாடி, சின்ன குக்கூண்டி, கீராம்பாடி, பெரிய குக்கூண்டி, புதுப்பாடி, மாங்காடு லாடாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் மின்வினியோகம் நிறுத்தப்படும்.

சென்னையில் இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக எழும்பூர், தாம்பரம், போரூர், அடையார், பொன்னேரி ஆகியதுணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

எழும்பூர் பகுதி: ஏழு கிணறு துணை மின் நிலைய பராமரிப்பில் உள்ள அனைத்து பகுதிகளிலும்.

தாம்பரம் பகுதி: கோவிலம்பாக்கம் – மேற்கு அண்ணாநகர், சிட்டிபாபு நகர், செல்வம் நகர், நியூ காலனி, ஐ.ஏ.எப் – வால்மீகி தெரு, காந்தி பூங்கா, எல்.ஐ.சி காலனி, புத்தர் தெரு, ராதா நகர் – கணபதிபுரம் மெயின் ரோடு, நாகாத்தம்மன் கோவில் தெரு, விஸ்வநாதன் தெரு, லஷ்மி நகர், பெரும்பாக்கம் – சௌமியா நகர் மாம்பாக்கம் மெயின் ரோடு, நீலா நகர், சிவகாமி நகர், நல்லதம்பி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

போரூர் பகுதி∶ திருநாகேஸ்வரம் – ஏரிக்கரை, திருமலை நகர், பார்வதி நகர், மூகாம்பிகை நகர், கோவூர் – பாலாஜி நகர், நான்கு ரோடு ஜங்ஷன், சுபலட்சுமி நகர், பாபு கார்டன் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையார் பகுதி: ஈஞ்சம்பாக்கம் நீலாங்கரை – ராஜா நகர், ஆசிரியர் காலனி, பாண்டியன் நகர், ஈ.சி.ஆர், வேளச்சேரி – ஆதிபதி மருத்துவமனை, டான்சி நகர் 8வது, 15வது மற்றும் 16வது தெரு, தரமணி மெயின் ரோடு, டாடா கன்சல்டன்ஸி, பேபி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

பொன்னேரி பகுதி: கும்மிடிபூண்டி சிப்காட் துணைமின் நிலையம்-II தொழிற்பேட்டை காம்ப்ளாக்ஸ், தமிழ்நாடு வீட்டுவாரிய குடியிருப்பு, பாப்பன்குப்பம், சிந்தலக்குப்பம் மற்றும் சித்ரராஜா கண்டிகை.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழங்கப்படும், இவ்வாறு தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

Categories

Tech |