மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி 1968 ஆம் வருடம் ஜூலை 18ஆம் நாள் பேரறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள் தான் தமிழ்நாடு நாள் என்று கொண்டாடப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் அண்ணா முதல்வரான பின் “மெட்ராஸ் மாகாணம்” என்ற பெயரை “தமிழ்நாடு” என்று மாற்றக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய நாளான (1968 ஜூலை 18) இன்று, “தமிழ்நாடு நாள்” விழாவாக கொண்டாட அரசு அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை கலைவாணர் அரங்கில் காலை 9 மணிக்கு விழா நடைபெறவுள்ளது. விழாவில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட அரியவகை தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. பல்துறை ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன. மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.