தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூலை 19) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருச்சி மாவட்டம்:
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, புத்தாநத்தம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 19) மின் விநியோகம் இருக்காது.இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் மணப்பாறை செயற்பொறியளா் இரா. அன்புச்செல்வன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புத்தாநத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் புத்தாநத்தம், காவல்காரன்பட்டி, இடையப்பட்டி, பன்னாங்கொம்பு, பண்ணப்பட்டி, அமயபுரம், கருமலை, எண்டபுளி, தாதமலைப்பட்டி, அழககவுண்டம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
தூத்துக்குடி மாவட்டம்:
தூத்துக்குடி சிப்காட் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதனால் மடத்துர் மெயின் ரோடு, சிப்காட் வளாகம், ராஜீவ் நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், தபால் தந்தி காலனி, ராஜகோபால் நகர், 3- வது மைல், பத்திநாதபுரம், சங்கர் காலனி, இந்திய உணவுக்கழக குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், இ.பி. காலனி, டைமண்ட் காலனி, மதுரை பைபாஸ் ரோடு, ஏழுமலையான் நகர், சில்வர்புரம், சுப்பிரமணிய புரம், பாலையாபுரம், வி. எம்.எஸ் நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், பால்பாண்டி நகர், ஆசீர்வாத நகர், முத்து நகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், என்.ஜி.ஓ. காலணி, சின்னக்கண்ணு புரம், பாரதி நகர், புதூர் பாண்டியாபுரம், முருகேசநகர், அகில இந்திய வானொலி நிலையம், கதிர்வேல் நகர், ஹரி ராம் நகர், கணேஷ் நகர், அமுதா நகர், புஷ்பா நகர், கால்டுவெல் காலனி, செல்சீலி காலனி, 3 செண்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம்:
காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ராசாத்தாவலசு, வெள்ளகோவில், தாசவநாய்க்கன்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.
மின் தடை செய்யப்படும் இடங்கள்:
ராசாத்தாவலசு துணை மின் நிலையம்: மேட்டுப்பாளையம், ராசாத்தா வலசு, வெள்ளகோவில், நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பினி, அஞ்சூா், கம்பளியம்பட்டி.
வெள்ளகோவில் துணை மின் நிலையம்: வெள்ளகோவில், நடேசன் நகா், ராஜீவ் நகா், கொங்கு நகா், டி.ஆா். நகா், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி. நகா், கே.பி.சி. நகா், சேரன் நகா், காமராஜபுரம்.
தாசவநாய்க்கன்பட்டி துணை மின் நிலையம்: தாசவநாய்க்கன்பட்டி, உத்தமபாளையம், செங்காளிபாளையம், காட்டுப்பாளையம், சிலம்பக்கவுண்டன்வலசு, வேலாம்பாளையம், கம்பளியம்பட்டி, குறிச்சிவலசு, குமாரபாளையம், சாலைப்புதூா், முளையாம்பூண்டி, சரவணக்கவுண்டன்வலசு, கும்பம்பாளையம், சோ்வகாரன்பாளையம்.
மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம்: அய்யம்பாளையம், பாப்பம்பாளையம், மங்கலப்பட்டி, மந்தாபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், அத்திபாளையம், கே.ஜி.புதூா், என்.ஜி.வலசு, வரக்காளிபாளையம், மேட்டுப்பாளையம்.
விருதுநகர் மாவட்டம்:
விருதுநகா் மாவட்டம் முத்துராமலிங்கபுரத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 19) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் இரா. கண்ணன் தெரிவித்திருப்பதாவது: முத்துராமலிங்கபுரம் துணைமின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
எனவே, முத்துராமலிங்கபுரம், குண்டுகுளம், கம்பாளி, மைலி, இலுப்பைக்குளம், மிதிலைக்குளம், புளியங்குளம், கோரைக்குளம், குருணைக்குளம், நத்தக்குளம், அகத்தாகுளம், முத்தனேரி, பொம்மக்கோட்டை, காளையாா் கரிசல்குளம், கத்தாளம்பட்டி, ரெட்டியபட்டி, மண்டபசாலை, குள்ளம்பட்டி, சவ்வாஸ்புரம், கல்லூரணி, ஆலடிப்பட்டி, கல்யாண சுந்தரபுரம், மீனாட்சிபுரம், குருணைக்குளம், கீழகுருணைக்குளம், மேலக்குருணைக்குளம், கல்லுமடம், நெடுங்குளம், செட்டிக்குளம், கணக்கி, பாறைக்குளம், உடையநாதபுரம், நல்லாங்குளம், வண்ணாத்தியேந்தல், பரளச்சி, சேலையூா், கொள்ளங்குளம், செங்குளம், பூலாங்கால், புரசலூா், கீழ்க்குடி, வாகைக்குளம், கள்ளக்காரி, மேலையூா் கூட்டுக்குடிநீா்த்திட்டம், ராஜகோபாலபுரம், தொப்பலாக்கரை, கிருஷ்ணாபுரம், மஞ்சம்பட்டி, கோட்டம்பட்டி, திருமலைபுரம், சேதுபுரம், கானாவிலக்கு, தும்முசின்னம்பட்டி, நரிக்குடி, வீரசோழன், உலக்குடி, பாப்பாங்குளம், டி. வேலங்குடி, ராமலிங்கா பஞ்சாலை பி அலகு, ஆகிய பகுதிகளிலும் மற்றும் அவற்றைச்சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.
புதுக்கோட்டை மாவட்டம்:
ஆதனக்கோட்டை புதுப்பட்டி பழைய கந்தர்வகோட்டை மற்றும் மங்களா கோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று 19-ந் தேதி செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப் பாலை சொக்கநாத பட்டி, மாந்தான்குடி காட்டு நாவல், மட்டையன் பட்டி மங்கலத்துப்பட்டி, கந்தர்வகோட்டை, அக்கட்சிப்பட்டி,
கல்லாக்கோட்டை, மட்டங்கால், வேம்பன் பட்டி, சிவன் தான் பட்டி, வீரடிப்பட்டி, புதுப்பட்டி, நம்புறான் பட்டி, மோகனூர், பல்லவராயன் பட்டி, அரவம்பட்டி, மங்கனூர், வடுகப்பட்டி, பிசானத்தூர், துருசுப்பட்டி, மெய்குடிபட்டி, அக்கட்சிப்பட்டி, வெள்ளாள விடுதி சுங்கம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி மின் வாரிய செயற்பொறியாளர் ராஜ்குமார் அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம்:
வடக்கன்குளம் அருகே பெருங்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 19-ந் தேதி செவ்வாய்க்கிழமை நடக்கிறது. எனவே அங்கு இருந்து மின்வினியோகம் பெறும் குமாரபுரம், புதியம்புத்தூர், மதகநேரி, மாறநாடார்குடியிருப்பு, செம்பிக்குளம், பிள்ளையார் குடியிருப்பு, யாக்கோபுரம், சவுந்தரலிங்கபுரம் ஆகிய பகுதிகளுக்கும், இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்னோட்டம் பெறும் காற்றாலை பண்ணைகளுக்கும் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை வடக்கன்குளம் காற்றாலை மின் பண்ணை உதவி செயற்பொறியாளர் ஜான் பிரிட்டோ தெரிவித்து உள்ளார்.
சென்னை:
சென்னையில் இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தி.நகர், தாம்பரம், அடையார் ஆகிய துணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தி.நகர் பகுதி: உஸ்மாள் ரோடு பசூல்லா சாலை, பார்த்தசாரதி புரம், காந்தி தெரு, ஜவகர்வால் நேரு, மாம்பலம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் சாலை, ரயில்வே பார்டர் ரோடு மற்றும் ஸ்டேஷன் வியூ ரோடு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
தாம்பரம் பகுதி: பெரும்பாக்கம் கைலாஷ் நகர், ஸ்ரீபெருமாள் நகர், பஜனை கோயில் தெரு, நூகம்பலயம் மெயின் ரோடு.
அடையார் பகுதி: வேளச்சேரி மகேந்திரா ஷோரூம், ராதா பிளாட், பிரசாந் மருத்துவமனை, வேளச்சேரி மெயின் ரோடு கந்தசாவை சோழமண்டலம், பம்மல் நல்லதம்பி தெரு, உதயம் நகர், தந்தை பெரியார் தெரு, முத்துமாரியம்மன் கோயில் தெரு, பாரதி நகர் முழுவதும் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
நாமக்கல் மாவட்டம்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மோகனூர், மோகனூர் சர்க்கரை ஆலை பகுதி, குட்லாம்பாறை, கீழ்சாத்தம்பூர், வாழவந்தி, மணப்பள்ளி, பாலப்பட்டி, எம்.ராசாம்பாளையம், காளிபாளையம், ஆரியூர், நன்செய், இடையாறு, ஓலப்பாளையம், புதுப்பாளையம், ராசாம் பாளையம், செங்கப்பள்ளி, பெரியகரசப் பாளையம், சின்னகரசபாளையம், நொச்சிப்பட்டி, பெரமாண்டம் பாளையம், குன்னிபாளையம், எல்லைக்காட்டூர், தீர்த்தாம்பாளையம், பேட்டப்பாளையம், தோப்பூர், மணியங்காளிப்பட்டி, நெய்க்காரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம்:
தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலைகள் நடந்துகொண்டிருப்பதால் கடந்த பல நாட்களாக அதிக அளவில் மின்தடை ஏற்படுகிறது. இதன் படி செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து தஞ்சை மாநகர மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில்இன்று செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான அண்ணாநகர் மின்பாதையில், யாகப்பா நகர், அருளானந்த நகர், அருளானந்தம்மாள் நகர், பிலோமினாநகர், காத்தூன்நகர் சிட்கோ, அண்ணா நகர், காமராஜர் நகர், பாத்திமா நகர், மேரிஸ் கார்னர், மற்றும் திருச்சி சாலை ராமகிருஷ்ணாபுரம், அருளானந்த நகர், வ உ சி நகர், பூக்கார தெரு, 20 கண் பாலம், கோரிக் குளம் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.